முக்கிய செய்திகள்

ரொரன்ரோ Downsview பகுதியில் இன்று காலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

440

இன்று அதிகாலை வேளையில் ரொரன்ரோ Downsview பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வளாகம் ஒன்றிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

Jane Street மற்றும் Wilson Avenue பகுதியில் அமைந்து்ளள குறித்த அந்த வர்த்தக வளாகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும், இதன்போது காயமடைந்த பெண் ஒருவர் சிறிது நேரத்தின் பின்னர் தானாகவே மருத்துவமனைக்கு சென்று சேர்ந்ததாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் காரணமாக வீதியில் வீழந்து சிறு காயங்களுக்கு உள்ளான மேலும் ஒருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பலத்த காயங்களுக்கு உள்ளான மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்படுகுிறது.

சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *