ரொரன்ரோ St. James Town பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல், மறு அறிவித்தல் வரையில் ஆயிரத்திற்கும் அதிகமானோரை இடம்பெயர வைத்துள்ளது

433

ரொரன்ரோ St. James Town பகுதியில் அமைந்துள்ள உயர் மாடிக் கட்டிடம் ஒன்றில் நேற்று பிற்பகல் வேளையில் ஏற்பட்ட பலத்த தீப்பரவல் காரணமாக, அங்கிருந்த ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

Parliament street மற்றும் Bloor street பகுதியில் அமைந்துள்ள 20 மாடிக் கட்டிடம் ஒன்றில், நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்த தீப்பரவல் ஆரம்பமாகியிருந்தது.

குறித்த அந்த கட்டிடதின் கீழ்த் தளத்தில் ஏற்ப்டட தீ, விரைவிலேயே கட்டிடத்தின் ஏனைய பகுதிகளையும் சூழ்ந்து கொண்ட நிலையில், சம்பவ இத்திற்கு விரைந்த ரொரன்ரோ தீயணைப்பு படையினர் பலத்த முயற்சியின் பின்னர் தீப்பரவலை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், அனைத்து மாடிகளிலும் சூழ்ந்திருந்த புகைமூட்டத்தினையும் அகற்றியு்ள்ளனர்.

இந்த தீயணைப்பு நடவடிக்கையின் போது நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், 26 தீயணைப்பு வாகனங்களும், பெருமளவான நீர் பாய்ச்சும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த கட்டிடத்திற்கான மின் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு தீயணைப்பு படை வீரரும் நூறு இறாத்தலுக்கும் அதிகமான எடைகொண்ட உபகரணங்களை மாடிப் படி வழியே எடுத்துச் சென்றுவரவேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும் இந்த தீப்பரவலால் கட்டிடத்தின் அடிப்படைக் கட்டுமானத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடியா பதிப்பு காரணமாக, அங்கிருந்த அனைத்து குடியிருப்பாளர்களும் வெளியேறற்ப்பட்டுள்ளதுடன், திருத்த வேலைகள் முன்னெடுக்கப்படும் வரையில் எவரும் வீடுகளுக்கு திரும்ப முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக எந்தவொரு குடியிருப்பாளரும் அந்த கட்டிடத்தினுள் நுளைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவித்தல் வரையில் இந்த தடை நடப்பில் இருக்கும் என்றும் ரொரன்ரோ தீயணைப்புத் துறையின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தீப்பரவல் காரணமாக 1,200 இலிருந்து 1,500 பேர் வரையில் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருக்கவேடிண்டியிருக்கும் என்று எதிர்பார்ப்பாதாகவும், எனினும் சிலர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளதனால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்ற போதிலும், இருவர் மட்டும் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *