முக்கிய செய்திகள்

ரொரண்டோவில் இரண்டு இடங்களில் 50வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

56

ரொறன்ரோவில் தொற்று அதிகம் பரவும் வலயங்களில் வசிக்கும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இரண்டு மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பதிவுகளை  மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.

St. Michael’s மருத்துவமனை மற்றும்  St. Joseph’s Health Centre, ஆகிய மருத்துவமனைகளிலேயே வெள்ளிக்கிழமை தொடக்கம் முன்னுரிமை அடிப்படையில் பதிவுகள் இடம்பெறுகின்றன.

இங்கு, நகரில் அதிக தொற்று ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கின்ற, 1971ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்களின் பதிவுகள், தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

முன்னதாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கும் மாத்திரமே, தடுப்பூசிக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

St. Joseph மருத்துவமனையில், M6K, M6N, M8V, M9A, M9B, M9C, M9R, M9V, M9W ஆகிய அஞ்சல் குறியீட்டுப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும்,

St. Michael’s மருத்துவமனையில் M4X, M5A , M5B ஆகிய அஞ்சல் குறியீட்டுப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *