முக்கிய செய்திகள்

ரொரண்டோவில் தடுப்பூசி செலுத்தல் மூன்று மடங்காகும்

213

ரொறன்ரோவில், அடுத்த இரண்டு வாரங்களில் தொற்று அதிகமுள்ள பகுதிகளில், தடுப்பூசியின் அளவை மூன்று மடங்காக அதிகரிக்கும் வகையில், நடமாடும் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிக முன்னுரிமைக்குரிய பிரதேசங்களில் இந்த நடமாடும் தடுப்பூசி திட்டத்தை ரொறன்டோ பொது சுகாதாரப் பிரிவு, மருத்துவமனைகள், மற்றும் சமூக சுகாதார மையங்களுடன் இணைந்து, செயற்படுத்தவுள்ளதாக நகர முதல்வர் ஜோன் ரொறி (John Tory) தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் வாரங்களில் தடுப்பூசி விநியோகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மூலோபாயத் திட்டம் அடுத்த வாரம் தொடக்கம் செயற்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டம் 13 முன்னுரிமைக்குரிய பிரதேசங்களில் செயற்படுத்தப்படவுள்ளது.

வட மேற்குப் பகுதியில், M9W, M9V, M9L, M9M, M9N, M6M, M3K, M3J, M3N, M3M ஆகிய அஞ்சல் குறியீட்டு பகுதிகளும், மத்திய பகுதியில், M4H மற்றும், கிழக்கில் M1J, M1G ஆகிய அஞ்சல் குறியீட்டுப் பகுதிகளும், முன்னுரிமைக்குரிய பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *