முக்கிய செய்திகள்

ரொரண்டோவில் வாகன மோசடிகள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

36

ரொறன்ரோவில் வாடகை வாகன மோசடிகள் இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வாகன நிறுத்துமிடத்தில் வாடகை வாகன சாரதி போன்று ஒருவரும், பயணி போல ஒருவரும் நின்று கொண்டு, மோசடியில் ஈடுபடுவதாக ரொறன்ரோ காவல்துறைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கொரோனா அச்சத்தினால் வாடகை வாகன சாரதி பணமாக கட்டணத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், பணத்தைப் பெற்றுக் கொண்டு, வங்கி அட்டை மூலம் பணத்தை அவருக்கு செலுத்த உதவுமாறும், பயணி போல நடிப்பவர், கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது உதவ முற்படுபவர்கள் தமது வங்கி அட்டையில் பணத்தை செலுத்தும் போது, அதன் இரகசிய இலக்க விபரங்களை கருவியில் பதிவு செய்து கொண்டு, புதிய அட்டையில் அவற்றை புகுத்தி, பணமாகவும், பொருட்கள் கொள்வனவு மூலமும் மோசடி செய்யப்படுவதாகவும் ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபோல பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால்,  பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் ரொறன்ரோ காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *