ரொறன்ரோவில் நேற்று விருந்துபசார நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற 30 பேருக்கு அபராத தொகைக்கான சீட்டுகள் காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 12.20 மணியளவில், 30 பேர் விருந்துபசார நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
எனினும் இந்த சம்பவம் இடம்பெற்ற இடத்தை அவர்கள் வெளியிடவில்லை.
எனினும், Queen Street மற்றும் Gladstone Avenue பகுதியில் 40 தொடக்கம் 50 வரையானோர் காவல்துறை வாகனங்கள் வந்ததை அடுத்து, வீதிகளில் ஓடிச் சென்றதை பார்த்த்தாக அங்குள்ள சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையினால் பலர் விரட்டப்பட்ட நிலையில் 10 பேருக்கு அபராத தொகைக்கான சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.