40வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்துகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொரண்டோ உட்பட ஒன்ராரியோவில் வாழ்பவர்கள் இவ்வாறான பதிவினைச் செய்வதற்கான இணைதள வசதிகள் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்கும் செயற்றிட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுவதாக பொதுசுகாதார உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையில் தடுப்பூசிகளை பெறுவதற்கு 5ஆயிரம் பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்