மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய ரொரன்ரோவின் முதல் தடுப்பூசி மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரொரன்ரோ கன்வென்ஷன் சென்டருக்குள் இதன் வெளிநோயர் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை, வாரத்தில் ஏழு நாட்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாளொன்றுக்கு 250 தடுப்பூசி மருந்துகளை வழங்க எதிர்பார்ப்பதாக ஒன்றாரியோவின் தடுப்பூசி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.