முக்கிய செய்திகள்

ரொரன்ரோவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ; நான்கு பேர் படுகாயம்

43

ரொரன்ரோவில் east-end  அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Queen Street கிழக்கில்,  Lee Avenue பகுதியில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட குடியிருப்பில் நேற்றிரவு 8 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

குடியிருப்பின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு பிரிவினர், குறுகிய நேரத்துக்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது காயமடைந்த இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இருவர் சிறிய காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தீவிபத்துக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *