ரொரன்ரோ மற்றும் பீல் பிரதேசங்கள் தொடர்ந்தும், சாம்பல் நிற முடக்க வலயத்தில் இருக்கும் என்று ஒன்ராரியோ முதல்வர் டக் போர்ட் (Doug Ford) அறிவித்துள்ளார்.
இந்தப் பகுதிகளில் முடக்க நிலை வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையவிருந்த நிலையிலேயே, நேற்றுமாலை ஒன்ராறியோ பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரொரன்ரோ மற்றும் பீல் பிரதேசங்களில், நவம்பர் 23ஆம் திகதி கொண்டு வரப்பட்ட முடக்கநிலை 28 நாட்களுக்கு நீடிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் நாள் வரை குறைந்தபட்சம், முடக்க நிலை நீடிக்கும் என்று ஒன்ராறியோ முதல்வர் அறிவித்துள்ளார்.