முக்கிய செய்திகள்

ரொறன்ரோவில் இந்த வாரம் இரட்டை இலக்க வெப்பநிலை

39

ரொறன்ரோவில் இந்த வாரம் இரட்டை இலக்க வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்தில் நிலவிய கடும் குளிருக்குப் பின்னர், வசந்த காலத்தைப் போன்ற வெப்பநிலை ரொறன்ரோவில் நிலவுகிறது.

இன்று 15 பாகை செல்சியஸ் வெப்பநிலை நகரில் எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுச்சூழல் கனடா கூறியுள்ளது.

இன்று பிற்பகலில் மழை பெய்யக் கூடும் என்றும், வியாழக்கிழமை வரை மழை நீடிக்கலாம் என்றும் தேசிய வானிலை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சூரிய வெளிச்சத்துடன் கூடிய வானத்தை வெள்ளியன்று எதிர்பார்க்கலாம் என்றும் அன்று பகலில் அதிகபட்சமாக 7 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *