முக்கிய செய்திகள்

ரொறன்ரோவில் ஒரே நாளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர், கொரோனா தடுப்பூசிக்குப் பதிவு

13

ரொறன்ரோவில் நேற்று ஒரே நாளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர், கொரோனா தடுப்பூசிக்குப் பதிவு செய்துள்ளனர் என்று மாநகர முதல்வர் ஜோன் ரொறி (John Tory) தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவுகள் நேற்றைய தினமே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே பெருமளவானோர் பதிவு செய்துள்ளனர்.

நேற்றுக்காலை 8 மணிக்கு பதிவுகள் தொடங்கிய நிலையில் பிற்பகல் 2.20 மணியளவில், 30 ஆயிரத்து, 362 பேர் தடுப்பூசிக்காக பதிவு செய்து கொண்டுள்ளனர்.

பதிவு ஆரம்பிக்கப்பட்டதும், நகர மருந்தகங்களில்,நிமிடம் ஒன்றுக்கு 106 பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக, மாநகர முதல்வர் ஜோன் ரொறி கீச்சகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *