முக்கிய செய்திகள்

ரொறன்ரோ காவல்துறை தமது இரண்டு பெண் உயர் அதிகாரிகளின் சேவையை இழக்கவுள்ளது

25

ரொறன்ரோ காவல்துறை தமது இரண்டு பெண் உயர் அதிகாரிகளின் சேவையை இழக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சோவ்னா கொக்சன் (Shawna Coxon) மற்றும் பார்பரா மக் லீன் (Barbara McLean) ஆகிய  இரண்டு பெண் உயர் அதிகாரிகளும் கடந்த 2017ஆம் ஆண்டு ரொறன்ரோ காவல்துறையில் பிரதி தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், பார்பரா  மக் லீன் Barbara McLean என்ற பெண் அதிகாரி கடந்த ஆண்டு நோவா ஸ்கொட்டியாவில் 22 பேர் கொல்லப்பட்ட பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின்  விசாரணைப் பணிப்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

அதேவேளை, சோவ்னா கொக்சன்  Shawna Coxon  என்ற மற்றொரு பெண் அதிகாரி,  மற்றொரு காவல்துறை சேவைக்காக அயர்லாந்துக்குப் பயணமாகவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *