முக்கிய செய்திகள்

ரொறன்றோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனையுடன் 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது

450

ரொறன்றோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனையுடன் 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது என்று நீதிபதி  அறிவி;த்த தீர்ப்பில் குறிப்பிட்டார்.
ஸ்கந்தராசா நவரெட்ணம், கிருஷ்ணா கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப்பேரை தொடர்கொலையாக புரிந்தமையை ஏற்றுக்கொண்ட மக்காதர் நீதிமன்றில் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில், இன்று அவருக்கான இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
50 ஆண்டுகள் வரை பிணையில் வெளிவரமுடியாத தீர்ப்பை வழங்குவது தொடர்பில் இடம்பெற்று வந்த வாதப் பிரதிவாதங்களின் நிறைவில், ஆயுட் தண்டனையுடன் 25 ஆண்டுகள் வரை பிணையில் வெளிவர விண்ணப்பிக்க முடியாது என்றும் நீதிபதி அறிவித்தார்.
இதன்படி, தற்பொழுது 67 அகவையுடைய மக்காதருக்கு 91 அகவை வரை நன்நடத்தை கோரி விண்ணப்பிக்க முடியாது.
பொதுமக்களின் பாதுகாப்பு, மக்காதரின் அகவை, சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீள இடம்பெறுவதனை தடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையில் மக்காதர் இந்த தொடர் படுகொலைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாகவும், கொலையுண்ட அனைவரும் பாலியல் முறைகேடு மற்றும் சித்தரவதைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக புகைப்படங்களின் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் மூலம் உறுதியாகியுள்ளது
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *