ரோஜர்ஸ் தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனமானது, தனது வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்றையதினம் அந்நிறுவனத்தின் வலையமைப்பில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அந்நிறுவனத்தின் சேவை பெறுநர்கள் பலர் பாதிப்படைந்தனர்.
இதனையடுத்தே ரோஜர்ஸ் நிறுவனம் இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ளது.
அத்துடன், அந்நிறுவனத்தின் இந்த இழப்பீட்டுத்தொகையானது அடுத்து வரும் மாததத்தின் மாதாந்த கொடுப்பனவு பற்றுச் சீட்டிலிருந்து குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று தான் முற்கொடுப்பனவு உரியவகையில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.