முக்கிய செய்திகள்

ரோஹன விஜேவீரவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அவரின் மனைவி நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார்

550

ரோஹன விஜேவீரவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அவரின் மனைவி நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியில் நிறுவுனராகவும், தலைவராகவும் இருந்த, ரோஹன விஜேவீர காணாமல் போய் பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரது மனைவியான சித்ராங்கனி விஜேவீர, தனது கணவரை நீதிமன்றில் உடனடியாக முன்னிலைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து, ஆட்கொணர்வு மனுவொன்றை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

1989 ஆம் ஆண்டு அப்போதய இலங்கை அரசாங்கத்தால் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீர கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *