முக்கிய செய்திகள்

றிச்மண்ட் ஹில் பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட பேண்ணை காவல்துறையினர் கண்டுபிடி்ததுள்ளனர்

540

வியாழக்கிழமை காலை வேளையில் றிச்மண்ட் ஹில் பகுதியில் வைத்து பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்ட பெண் ஒருவரை தாங்கள் மீட்டுள்ளதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 2.50 அளவில், High Tech வீதி மற்றும் Silver Linden Drive பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அழைப்பு மணியை ஒரு பெண் அழுத்திய போதிலும் யாரும் பதிலளிக்கவிலலை எனவும், எனினும் அந்த வேளையில் அங்கு இடம்பெற்ற சம்பவத்தை அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு ஒளிப்பதிவு சாதனம் பதிவு செய்திருந்ததாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுளளனர்.

அந்த வகையில் குறித்த அந்தப் பெண் ஆண் ஆயுததாரி ஒருவரினால் மிரட்டப்பட்டு, தலைமுடியில் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டு, வாகனம் ஒன்றினுள் ஏற்றி கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கடத்த்ல் முயற்சியின் போது குறித்த அந்த பெண் பலத்த குரலில் தன்மீதான தாக்குதலை நிறுத்துமாறு சத்தமிட்ட போதிலும், அந்த வேளையில் யாரும் அங்கு உதவிக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து தலைமுடியில் இழுத்து காரில் ஏற்றப்பட்ட பெண் அங்கிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சில தகவல்களின் அடிப்படையில், நேற்று இரவு அந்தப் பெண்ணைக் கண்டு பிடித்து்ளளதாக காவல்துறையினர் தெரிவித்து்ளளனர்.

தற்போது மீட்கப்பட்டுள்ள றிச்மண்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த 28 வயதான அந்தப் பெண் உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவரைக் கடத்திய ரொரன்ரோவைச் சேர்நத 20 வயதான ஜோனதன் மக்லினன் என்ற நபரைத் தேடி வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *