முக்கிய செய்திகள்

லசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது

62

சண்டே லீடர் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்துவருவதாக அவரது மகள் அகிம்ஸா விக்ரமதுங்க வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு எழுதியிருந்த கட்டுரையை அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.

சிறிலங்கா தலைவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதிப்பதற்காக சர்வதேச சமூகத்தை திரட்டி சிறிலங்காவை அழித்து அதன் வீழ்ச்சியை பார்ப்பதற்கு” அகிம்ஸா விக்ரமதுங்கவும் மேலும் பலரும் முயற்சிப்பதாக வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

“புலம்பெயர் குழுக்கள் மற்றும் எதரணி அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில தரப்பினர்” அகிம்ஸா விக்ரமதுங்கவை இயக்குவதாக அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாடு சவால்களை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது துரதிஸ்டவசமானது” என சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“குற்றவாளிகளை ஒருநாள் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி வழங்கும்” முயற்சியில் அகிம்ஸா வெற்றிபெறுவதற்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *