முக்கிய செய்திகள்

லட்வியாவில் நேட்டோ நடவடிக்கைகளுககு தலைதாங்கிவரும் கனேடிய படைகளை கனேடிய பிரதமர் இன்று சந்திக்கவுள்ளார்

299

லட்வியாவில் நேட்டோ அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கிவரும் கனேடிய படைகளைச் சந்திப்பதற்காக, பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று லட்வியா நோக்கி பயணிக்கவுள்ளார்.

நோட்டோ அமைப்பின் மாநாடு ஒன்று இநத் வாரத்தில் பிரசெல்சில் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக பிரசெல்ஸ் செல்லும் பிரதமர், அதற்கு முன்னதாக லட்வியா சென்று அங்கு பணியாற்றிவரும் கனேடிய இராணுவத்தினருடன் கலந்துரையாடவுள்ளார்.

2014ஆம் ஆண்டில் ரஷ்ய ஆதரவுக் குழுக்கள் உக்ரெய்னின் கிழக்கு பிராந்தியமான கிரைமியாவை ஆக்கிரமித்ததை அடுத்து, அங்கு நேட்டோ படைகளால் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கனடா தலைமையேற்று வருவதுடன், ஏறக்குறைய 450 கனேடிய படைகள் அங்கு நிலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனேடிய படைகளர் தவிர அல்பேனியா, செக் குடியரசு, இத்தாலி, போலந்து, ஸ்லோவோக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் படைகளும் அங்கு முகாமிட்டுள்ள நிலையில், நேட்டோ அமைப்பில் கனேடிய படைகளின் பங்களிப்பினை மீள் உறுதிப்படுத்தும் வகையில் பிரதமரின் இந்தப் பயணம் அமைவதாக கருதப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *