லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!-February 04

236

எதிர்வரும் 4ம் திகதி ஸ்ரீ லங்கா தனது 71வது சுதந்திர தின நிகழ்வை கொண்டாடவுள்ளது. இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல் தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்துள்ளது என்பது வரலாற்று ரீதியான உண்மை. அந்தவகையில் தமிழினம் இன்றும் தமது தன்னாட்சி உரிமையை வலியுறுத்து பல வழிகளிலும் போராடி வருகின்றது.

அதனடிப்படையில்,

அரசியல் கைதிகளை விடுதலை செய் !

நில அபகரிப்பை நிறுத்து!

காணாமல் ஆக்கப்பட்டோர் விபரங்கள் எங்கே?

மலையக மக்களின் அடிப்படை ஊதியத்தை 1000 ரூபாவாக உயர்த்து!

மன்னார் புதைகுழி -நீதி எங்கே?

தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி !

போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலுள்ள அனைத்து தமிழ் மக்களையும் இவ்வுரிமை போராட்டதிற்கு ஒத்துழைப்பு நல்கும் வண்ணம் வேண்டிக்கொள்ளப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *