முக்கிய செய்திகள்

லிபரல் கட்சியினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு வரி விதிக்கப்படும்.

360

லிபரல் கட்சியினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு வரி விதிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்றூ ஷியர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களை சந்தித்த போது அவர் தனது இந்த விமர்சனக் கருத்தை தெரிவித்தார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தலைமையிலான லிபரல் அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் மற்றும் அதனை அமுல்படுத்தும் விதம் மிகவும் மோசமானது என்று தனது விமர்சனத்தை தெரிவித்த அவர், இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் கூறினார்.
ஜஸ்டின் ட்ரூடே மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டால் நிச்சயமாக வரிகள் பாரியளவில் அதிகரிக்கும் என்றும், வாகன எரிபொருள் உணவு, மற்றும் அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி உட்பட பொதுமக்களுக்கு மிகவும் அதிகளவிலான செலவினம் ஏற்படுமென்றும் அன்ட்றூ ஷியர் தனது விமர்சனக் கருத்தை தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *