முக்கிய செய்திகள்

லிபியாவில் கனேடியர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்

1375

இந்த வார ஆரம்பத்தில் கனேடியர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பணயக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதனை கனேடிய மத்திய அரசாங்கம் தற்போது உறுதிப்படுத்தி்யுள்ளது.

கனேடிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடிய மிகக் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு, அரசாங்கம் அனைத்து வழிகளிலும் அர்ப்பணிப்புடனும் விடா முயற்சியுடனும் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அந்த கனேடிய பிரஜையின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனாலும், கடத்தப்பட்ட அந்த நபரை மீட்கும் நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடும் என்பதனாலும், சம்பவம் தொடர்பிலான மேலாதிக தகவல்களை தற்போதைக்கு அரசாங்கத்தினால் வெளியிட முடியாதுள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.

லிபியாவில், அல்ஜீரியாவுடனான எல்லைப் பகுதியில் இயங்கிவரும் கட்டுமான பராமரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய மூன்று வெளிநாட்டினர் இனந்தெரியானத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, இந்த வாரத்தின் ஆரம்பித்தில் லிபிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அல் கைடா அமைப்பினாலேயே அவர்கள் கடத்தப்பட்டதாக சில செய்திகள் வெளியான போதிலும், அவர்கள் வேறு ஒரு சிறு ஆயுதக் குழுவினாலேயே கடத்திச் செல்லப்பட்டதாக அந்த பிராந்திய நகரபிதா கடந்த வியாழக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்ட மூவரில் இருவர் இத்தாலிய நாட்டவர் என்பதனை இத்தாலிய அதிகாரிகள் ஏற்கனவே உறுதிப்படத்தியிருந்த நிலையில், மூன்றாவது நபர் கனேடியர் என்பதனை கனேடிய அரசாங்கம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *