லூ சாவோஹியூ சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் பாலித கொஹன்ன சந்தித்துப் பேச்சு

31

சிறிலங்கா மற்றும் சீன அரசாங்க உயர்மட்ட தலைவர்கள் விரைவில் கொழும்பு மற்றும் பீஜிங்கிற்கு பயணங்களை மேற்கொள்ளவிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்தவாரம் பிஜிங்கில் சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லூ சாவோஹியூவை (Luo Zhaohu), சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் பாலித கொஹன்ன சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு சீனா முழு ஆதரவை வழங்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களின் பயணங்கள் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கூடிய விரைவில், சிறிலங்காவின் உயர்மட்டத் தலைவர்கள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவில்லை.

கொரோனா தொற்று காரணமாக அவரது சீனப் பயணம் பிற்போடப்பட்டு வந்தது.

அண்மையில் அவர் சிறிலங்கா ஜனாதிபதி கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ள நிலையில் கூடிய விரைவில் பீஜிங் சென்று சீனத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை, சீனாவின் உயர் மட்டத் தலைவர்களின் சிறிலங்கா பயணமும் எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *