முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவின் லொம்போக் தீவில் மீண்டும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்

651

இந்தோனேசியாவின் லொம்போக் தீவில் மீண்டும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடைசியா தற்போது உணரப்பட்ட நிலநடுக்கம் 5.9 அல்லது 6.2 ரிக்கடர் அளவில் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் சில கட்டிடங்கள் இடிந்ததாகவும் கண்ணாப்பாளர்கள் தவகல் வெளியிட்டு்ளளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தில் சிதைவடைந்த கட்டிட இடிபாடுகளை தோண்டி தப்பிப் பிழைத்தவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்னமும் அங்கு தொடர்ந்து வரும் நிலையில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சில கிராமங்கள் முற்றாக அழிந்து போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையுள்ள நிலவரப்படி 347 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்காணவர்கள் வீடுகளை இழந்துள்ளதாகவம் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *