போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு,கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டே தென்னிலங்கையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவு திட்ட குழுநிலை விவாதத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்ப் பிரதிநிதிகள் பொய் கூறுவதாக அரச தரப்பு உறுப்பினர் சுரேன் ராகவன் குற்றம்சாட்டியிருந்தார்.
தமிழ்ப் பிரதிநிதிகள் அபிவிருத்தியில் அக்கறை காட்டுவதில்லை என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மன்னாரில் காற்றாலை மின் திட்டம் திறக்கப்படும் நிகழ்வு குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
அத்துடன், தாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் போருக்குப் பின்னர் வடக்கு,கிழக்கின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பெருமளவு நிதியைக் கொண்டே தெற்கில் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்..