வடக்கில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட சுண்டுக்குளியைச் சேர்ந்த 37 வயதுடையவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆடைத்தொழிற்சாலை பணியாற்றும் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.