முக்கிய செய்திகள்

வடக்கு- கிழக்கு பகுதிகளில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கண்காணிப்பு அலுவலகங்களை நிறுவவேண்டும்

45

சிறிலங்காவின் வடக்கு- கிழக்கு பகுதிகளில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கண்காணிப்பு அலுவலகங்களை நிறுவவேண்டும் தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது சிறிலங்காவில் தமிழ் மக்கள் கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அடிப்படை உரிமைகளுக்காகவும் ஜனநாயக அதிகாரத்திற்காகவும் பெரும் போராட்டத்தை சந்தித்துள்ளனர்.

சிறிலங்காவின் இனவெறி அரசாங்கம் அவர்களது வேண்டுகோளை நிராகரிப்பதுடன் மாத்திரமில்லாமல் அவர்களை தொடர்ச்சியான இனவெறி துஷ்பிரயோகங்களுக்குட்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு இனச்சுத்திரிகரிப்பு, திட்டமிடப்பட்ட இனஅழிப்பு ஆகியவற்றையும் முன்னெடுத்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிறிலங்காவை பொருத்தமான சர்வதேச பொறிமுறையை உருவாக்குவதன் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *