வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இணைப்பாட்சி முறைமையிலான தீர்வை கிடைக்க பிரித்தானிய அரசாங்கம் முழுமையான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் தெற்காசிய திணைக்களத் தலைவரும் இந்திய இணைப்பாளருமான ஃபேர்கஸ் ஓல்ட் இன்று விக்னேஸ்வரனைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுதுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு மிகவும் குறைந்தளவான சில உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவே முயற்சிக்கின்றனர் என்று குறிப்பிட்ட விக்னேஸ்வரன், தமிழ் மக்களுக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறி வாக்குப் பெற்ற இவர்கள் அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்யாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் தமிழ் மக்களின் பாரம்பரியம், ஒரு சில வருடங்களில் இல்லாதொழிக்கப்படும் நிலை இன்று காணப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இணைப்பாட்சி முறைமையிலான தீர்வு கிடைக்க கோரிக்கை
Jan 25, 2019, 01:24 am
259
Previous Postஒன்றாரியோ மாகாண வீதிகளில் சாரதியற்ற தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி!
Next Postஅம்மா மக்கள் முன்னெற்றக்கழக கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் ரிரிவி தினகரன் கோரிய குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது