வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவு பௌத்த தொல்பொருள் அடையாளங்கள்

19

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவு பௌத்த தொல்பொருள் அடையாளங்கள் காணப்படுவதாக, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தொல்பொருள் ஆய்வுகள் குறித்த எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாட்டின் பெரும்பாலான தொல்பொருள் பகுதிகள், பௌத்த அடையாளங்களைக் கொண்டவை என்பதை மறுக்க முடியாது.

தமிழ் மக்களை இலக்கு வைத்து வடக்கு, கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

தொல்பொருள் ஆய்வுகளை முன்னெடுக்கும் போது பிரதேச செயலகத்துக்கோ, அல்லது அதிகாரிகளுக்கோ அறிவிக்கப்படுவதில்லை.

எனினும், வடக்கில் விசேட கவனம் செலுத்தி முன் அறிவிப்பு விடுத்து ஆய்வுகளைச் செய்ய முயற்சிக்கிறோம்.

இவ்வாறான ஆய்வுகளை முன்னெடுப்பதால் எந்தவொரு சமூகத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படுவதில்லை.

தவறான கருத்துக்களை முன்வைத்து, மக்களிடம் முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடாது.

நாட்டின் வரலாற்றை, தொன்மையை ஆய்வு செய்வதில் எந்தவொரு மதத்துடனும், இனத்துடனும் அது நின்றுவிடக் கூடாது.

தமிழர்களுக்கும் இது தான் நாடு. எனவே அனைவரதும் வரலாற்றை ஆய்வு செய்வதே எமது நோக்கம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *