முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக மாவை

182

வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் உயர்பீட த்தின் கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களே போட்டியிடவேண்டும் என முன்மொழிந்தார்.

இதன்போது எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *