முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா

44

வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் 9 பேருக்கும் வவுனியாவில் 3 பேருக்கும் என மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 370 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்
12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உத்தியோகத் தர் ஒருவருக்கும், தாதிய மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,தெல்லிப்பழை மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் தனிமைப்படுத்தல் விடுதிகளில் நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல்,வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *