பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் வவுனியா உள்ளிட்ட நான்கு இடங்களில் பரவி வருவதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து, வடபகுதியில் உள்ள மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை உருமாறிய வைரஸ் இங்கையிலும் 4 பிரதேசங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக, ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.
கொழும்பு , அவிசாவளை , பியகம மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளிலேயே இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தெளிவுபடுத்தியுள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன், சைப்ரஸ் நாட்டிலிருந்து வந்து, பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுக்குத் தான் பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
உள்ளூர் பொதுமக்களிடம் அந்த வகை வைரஸ் இல்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.” என்று கூறியுள்ளார்.