வடமாகாணத்தில் புதிதாக 9 கொரோனா தொற்றாளர்கள்

213

வடமாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது புதிதாக 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று 679 பேருக்கு யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆய்வு கூடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *