வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமாக காவல்த்துறை பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையினை முன்வைத்து வடமாகாண சபை தலைவர் சிவஞானம் காவல்த்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தென்னிலங்கை இனவாதிகள் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டு, அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மீது சுமத்துவதற்கு முயல்கின்றனர் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் அச்சம் வெளியிட்டுள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டியு்ளார்.
எனவே முதலமைச்சரின் பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான தீர்மானமொன்றை வட மாகாண சபை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுளு்ளார்.
தற்போது மாகாண சபையின் சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக, வடமாகாண முதலமைச்சருக்கும், நாட்டில் உள்ள ஏனைய முதல மைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்குச் சமமான சாதாரண காவல்த்துறை பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளதாகவம் அவர் விபரித்துள்ளார்.
எனினும் முதல்வருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையால், அவருக்கு மேலதிக காவல்த்துறை பாதுகாப்பை வழங்குமாறு தமது அந்தக் கடிதத்தில் கோரியுள்ளதாகவும் வடமாகாணசபையின் அவைத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.