முக்கிய செய்திகள்

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது

1354

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது இதனால் யாழ் குடாநாட்டில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளரான உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி சுரேந்தர் ஆகிய இருவரையும் வடக்கிலிருந்து இடமாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை வடபிராந்தி இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் முன்னெடுத்துள்ளனர்

இதனால் இன்று யாழ் மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை காரைநகர் மற்றும் கோண்டாவில் ஆகிய மூன்று அரச பேருந்து சாலைகளின் பேருந்து சேவைகள் எதுவும் இன்று இடம்பெறாததுடன் ஊள்ளு}ர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான எவ்வித அரச சேவைகளும் யாழில் தடைப்பட்டுள்ளது

இவ்விடயத்தினை தீர்த்து வைக்கும் பொருட்டு இன்றையதினம் இலங்கை போக்குவரத்துசைபின் உயரதிகாரிகளுக்கும் போராட்டத்தை மேற்கொண்டுவரும் ஊழியர்களிற்குமிடையில் வவுனியால் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளநிலையில் வட பிராந்திய ஊழியர்கள் இன்று வவுனியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்-குரல்-

இன்|று இரண்டாவது நாளாகவும் பஸ் போக்குவரத்துசேவை இடம்பெறாத காரணத்தினால் யாழ் குடாநாட்டில் அரச சேவையை நம்பியுள்ள பொதுமக்கள் பெரிதும் சிரமங்களுக்கு எதிர் கொண்டுள்ளனர்-குரல்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *