நாடாளுமன்றத்தின் வரவு செலவு கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத் தொடர் ஆரம்பமானதோடு ஜனாதிபதி உரையாற்றியபோது எதிர்க்கட்சிகள் அதனை புறக்கணித்திருந்தன.
வேளாண் சட்டங்களை அமுலாக்கியமைக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாகவே எதிர்க்கட்சிகள் இவ்வாறு செயற்பட்டிருந்தன.
இதேநேரம் இந்தக் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
முதல் கட்டம் இன்று ஆரம்பமாகின்ற நிலையில், பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது கட்டம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.