2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி.யின் கொத்மலை பிரதேச சபைக் கூட்டம் பூண்டுலோயாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜே.வி.பி.யின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கூட்டு நடவடிக்கையை மக்களும் நாமும் ஏற்றுக்கொண்டதாக இல்லை…. \ வரவு – செலவு திட்டத்தை தோற்கடிப்போம் – ஜே.வி.பி. உறுதி