வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்குவதை இரத்துச் செய்வதாக முதல்வர் டக் ஃபோர்ட்டின் ஒன்றாரியோ மாகாண அரசு அறிவித்துள்ளது.

332

ஒன்றாரியோவில் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இலவசமாக கல்வி கற்பதற்கு முன்னைய கத்தலின் வின்னின் லிபரல் அரசு வழங்கிய வாய்ப்பை இரத்துச் செய்வதாக டக் ஃபோர்ட் தலைமையிலான புறொகிறசிவ் கொன்சேவடிவ் அரசு அறிவித்துள்ளது.
முன்னைய அரசு அதிக வருமானம் பெறுவோருக்கும் மானியங்களை வழங்கியதெனக் கண்டனம் வெளியிட்ட மாகாண பல்கலைக்கழகங்கள் அமைச்சர் மெரிலீ ஃபுளர்ரன் (ஆநசசடைநந குரடடநசவழn) மிகக் கூடிய அளவு உதவி தேவைப்படும் மாணவர்களில் கவனம் செலுத்தப்படுமென கூறினார்.
ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் டொலர் வரையான வருமானத்தைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ழுளுயுP எனப்படும் ஒன்டாரியோ மாணவர் உதவித் திட்டத்தில் இருந்து உதவி பெறக் கூடியதாக இருந்தது. தற்போது அதற்கான எல்லை ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் டொலராக வரையறை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்லூரிகளினதும், பல்கலைக்கழகங்களினதும் கட்டணங்களைப் பத்துச் சதவீதத்தால் குறைப்பதாகவும் மாகாண அரசு அறிவித்தது.
இதன் காரணமாக பல்கலைக்கழகங்களுக்கு 360 மில்லியன் டொலர் இழப்பும் கல்லூரிகளுக்கு 80 மில்லியன் டொலர் இழப்பும் ஏற்படும். இந்தப் பணத்தைக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களுமே பொறுக்கவேண்டுமென மாகாண அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் டக் ஃபோர்ட்டின் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஏழை மாணவர்கள் அதிக அளவு கடன்களைப் பெறவேண்டியிருக்குமெனவும், அதேவேளை, செல்வந்த மாணவர்களுக்குப் பத்துச் சதவீத கட்டணக் குறைப்பு வழங்கப்படுவதாகவும் லிபரல் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.
அவ்வாறே புறோகிரசிவ் கொன்சவேடிவ் அரசின் இந்த நடவடிக்கையால், கல்வித் தராதரம் வீழ்ச்சியடையுமென மகாண என்டீபி கட்சி என்டீபீ கண்டித்துள்ளது.
இதேவேளை ஒன்டாரியோ மாகாண அரசின் இந்த அறிவிப்பானது, தனது பல்கலைக்கழக கல்வியை தொடரமுடியாத நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக வின்சரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *