முக்கிய செய்திகள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரிடத்தில் இரண்டாம் நாளும் காவல்துறை விசாரணை

144

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அனுமதியின்றி சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட திட்ட அறிவிப்புப் பொயப்பலகையினை அகற்றியமை தொடர்பில் இன்று இரண்டாவது தடவையும் தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இன்று காலை நீர்வேலியில் வெள்ள தணிப்புச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அச்சுவேலி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி தவிசாளரைச் சந்தித்து மேலதிக நடவடிக்கைகளுக்காக பிரதேச சபையில் பாதுகாப்பில் உள்ள அறிவித்தல் பலகையினைத்தருமாறு என்னைக் கேட்டுக்கொண்டார்.

நான் கடிதம் ஒன்றைக்  கோரி அவணப்படுத்திய பின் மேலதிக நடவடிக்கைக்காக என்ற காரணத்தினால் அப் பொயர்ப்பலகையினை வழங்கினேன்.

நான் வாக்குமூலத்தில், பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி ஒன்றை எமது சம்மதமோ அனுமதியோ பெறாது புனரமைப்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை அறிவித்தல் பெயர்ப்பலகையிலும் எமது பதிவிற்கு உட்பட்ட வீதியை புனரமைப்பதற்காக ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைத்தல் என்ற தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதேச சபை ஒன்றின் பகிரப்பட்ட அதிகாரத்தினை நிலைநாட்டுவதற்காக அகற்றினேன் என்பதை சொல்லியிருக்கின்றேன் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் மேலும் தொரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *