வலிந்து காணாமற்போனவர்கள் எவரும் எங்கும் தடுத்துவைக்கப்படவில்லை – இலங்கை சனாதிபதி

1170

வலிந்து காணாமற்போனவர்கள் எவரும் எங்கும் தடுத்துவைக்கப்படவில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்குமெனவும் அத்துடன் தேவையான உதவிகளையும் வழங்குவோமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரைகளிற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள மைத்திரிபால சிறிசேன, அங்கு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இன்று யாழ்.குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட மக்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், வடக்கு முதலமைச்சரை குற்றம் சுமத்தும் வகையில், 2017 இல் வடக்கிற்கு வீடுகட்டவும் மீள்குடியேற்றத்திற்கும் அனுப்பிய பணத்தில் 60 வீதம் மீளத்திருப்பப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *