முக்கிய செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரங்கள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் கிளிநொச்சியில்

100

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரங்கள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் கிளிநொச்சியில் இன்று காலை  இடம்பெற்றுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான, கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்த  கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் புனித திரேசா மண்டபத்தில் இந்தக் கலந்துரையாடர் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் தோமஸ் இமானுவேல் , அருட் தந்தையர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *