வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அலுவலகம் அம்பாறை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

510

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அலுவலகம் அம்பாறை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் இன்று திருக்கோவில் வாக்கிறீசா வீதியில், சங்கத்தின் தலைவி செல்வராணி தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 மே 18ஆம் நாள் நடைபெற்ற இறுதிக் கட்ட போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட நபர்களின் உறவுகள் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் 500 நாட்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறையிலான உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தின் பின்னர் மாவட்ட ரீதியான தரவுகளை சேகரிக்கும் அடிப்படையில் இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இநத நிகழ்வானது திருக்கோவில் கற்பக விநாயக ஆலய முன்பாக காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக இறைவழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் ஊடகங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *