முக்கிய செய்திகள்

வலிந்து காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

273

வலிந்து காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களின் பிரதிநிதிகள் இன்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் 17 நாட்டு தூதுவராலயங்களின் பிரிநிதிகளை சந்தித்து இந்த கோரிக்கை அடங்கிய மனுவை கையளித்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற போது வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று இதில் கோரப்பட்டுள்ளது.

அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கண்டறிய சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் திரட்டப்பட்ட கையொப்பம் அடங்கிய மனுவையும் கையளித்தனர்.

அத்துடன் குறித்த மனு, பிரித்தானியா, கனடா, ஜேர்மன், ஒஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதிநிதிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *