முக்கிய செய்திகள்

வலுவான இந்தியாதான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயற்படும்

188

வலுவான இந்தியாதான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயற்படும் என்று  அமெரிக்க அரசின் ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான றொபேர்ட் ஓ பிரையன் (robert o’brien) , பாதுகாப்பு சார்ந்த 10 பக்க ஆவணத்தை, இரகசியமற்ற ஆவணம் என்று,  வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “ கடல்சார் பாதுகாப்பு மற்றும் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிற பிராந்தியங்களில், அமெரிக்காவும் இந்தியாவும், சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கின்றன.

சீனாவின் எல்லை அத்துமீறல்களை எதிர்கொள்ளும் திறனை இந்தியா பராமரித்து வருகிறது.

தெற்காசியாவில் இந்தியா முதன்மையானது. இந்திய பெருங்கடல் பாதுகாப்பை பேணுவதில், அது முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு வலுவான இந்தியா, ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் ஒத்துழைப்புடன் சீனாவுக்கு சரிநிகர் சமானமாக எதிர்நிலையில் நின்று செயல்படும்.

அமெரிக்காவும், ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள அதன் கூட்டாளிகளும் தங்கள் இறையாண்மையை பலவீனப்படுத்தும் நோக்கில் செயல்படும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்க்கின்றன.

இந்தியாவின் உயர்வையும், திறனையும் விரைவுபடுத்துவதே எங்கள் நோக்கம்” என்றும்  அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *