முக்கிய செய்திகள்

வழமைபோன்று நினைவேந்தல் இம்முறையும் நடைபெறும்; பொதுக்கட்டமைப்பு அறிவிப்பு

265

இறுதிக்கட்டப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமை போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப் பு என்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தும் வகையில் தவத்திரு வேலன் சுவாமிகள்,  யாழ். மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதி அருட்பணி செல்வன் அடிகளார் ஆகியோர் கூட்டாக இதனைத் தெரிவித்துள்ளனர்.

 “முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அமைதியான முறையில் முன்னெடுக்கவே ஆசைப்படுகிறோம்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தரவைக்கு குறைவானவர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுத்து இருக்கிறோம்.

ஏனைய அனைவரும், தங்களது வீடுகளிலேயே சுடரேற்றி அஞ்சலி செலுத்துமாறு வடகிழக்கு பொது கட்டமைப்பு கோருகின்றது.

அதேவேளை, முள்ளிவாய்க்காலிலுள்ள நினைவுத் தூபி சேதமாக்கப்பட்டுள்ளமை மற்றும் நடுகல்லை நாட்டுவதற்காக எடுத்து வந்தவர்களை சிறிலங்கா படைகளும் காவல்துறையும், தடுத்தமையினால் அவர்களிடமே அதனை கைவிட்டு சென்றிருந்தனர்.

எனவே அவர்களே இதற்குப் பொறுப்பு கூற வேண்டும். அரசுதான் தற்போது குழப்பங்களை ஏற்படுத்துகின்றது” என்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தும் வகையில் தவத்திரு வேலன் சுவாமிகள்,   குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *