முக்கிய செய்திகள்

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்

45

சிறிலங்கா தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா – குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், சிறிநேசன், செல்வராசா, ஆகியோரும்,

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், சயந்தன், குருகுலராஜா, சட்டத்தரணி கே.வி.தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், ஜெனிவா கூட்டத்தொடர், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *