முக்கிய செய்திகள்

வாகனத்தாக்குதலில் பலியானவர்கள் ஒருபோதும் மறக்கப்படமாட்டார்கள்-ஜோன்ரொரி

237

ரொறன்ரோவை பேரழிவிற்கு உள்ளாக்கிய வாகனத் தாக்குதலில் பலியானவர்கள் ஒருபோதும் மறக்கப்படமாட்டார்கள் என்று நகர முதல்வர் ஜோன் ரொறி (John Tory) தெரிவித்துள்ளார்.

2018 ஏப்ரல் 23ஆம் நாள் நடந்த பேரழிவில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை, அவர்களின் நினைவுகளை உயிரோடு வைத்திருக்கும் முயற்சியில் ஒவ்வொரு ஆண்டும் ரொறன்டோ நகரம் ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயமடைந்திருந்தனர்.

மேற்பட அனர்த்தத்தினால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து தான் இன்னமும் விடுபடவில்லை என்றும், ரொறன்ரோ நகர முதல்வர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் வகையில், இறந்தவர்களின் நினைவாக, 10 மெழுகுவர்த்திகள் முதல்வரின் அலுவலக சாளரத்தில் ஏற்றி வைக்கப்படும் என்றும், நகர மண்டபத்தின் வெளிப்புறம் மங்கிய வெளிச்சத்தில் இருந்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *