முக்கிய செய்திகள்

வாகனப் பேரணி வெற்றிகரமாக நிறைவு; கனடியத்தமிழர் தேசிய அவை

226

தமி ழின அழிப்புக்கு எதிராகவும், பொத்துவில் தொடக்கம் பொலி கண்டி வரையான பேரணிக்கு வலுச்சேர்த்தும் முன்னெடுக்கப்பட்ட வாகனப்பேரணி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக கனடியத்தமிழர் தேசிய அவையின் ஊடகப்பேச்சாளர் தேவராசா தெரிவித்தார்.

கனடியதமிழ் வானொலியின் செய்திப்பிரிவுக்கு ரொரண்டோ மாபெரும் கவனயீர்ப்பு பேரணியின் நிறைவில் பிரத்தியேகமாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மிகக்குறுகிய அழைப்பில் பத்தாயிரத்து மேற்பட்ட வாகனங்களும் நூற்றுக்கு மேற்பட்ட பாரஊர்திகளும்  பங்கேற்றிருந்தன.

கனடியத் தமிழர் சமூகம்இ கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில்   நடைபெற்ற இந்தப் பேரணியில், தமிழீழ தேசியக் கொடி மற்றும் கனடிய தேசியக் கொடி ஆகிய வாகனங்களில் பறக்கவிடப்பட்டதோடு இன அழிப்புச் செயற்பாடுகளை சித்தரிக்கும் விடயங்களையும் பார ஊர்தியில் காணப்பட்ட பதாகைகள் தாங்கியிருந்தன.

அத்துடன் எமது இனத்தின் அழிப்பினை மாற்று சமூகங்களுக்கு தெளிவுபடுத்தி சுட்டிக்காட்டுவதும் இந்த பேரணியின் மற்றுமொரு நோக்கமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக எதிர்பார்க்கப்பட்டதை விடவும் ஆயிரக்கணக்கானவர்களின் பங்கேற்பால் மாபெரும் பேரணி வெற்றிகண்டுள்ளது என்றார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *