முக்கிய செய்திகள்

வாக்களி தமிழா வாக்களி!

1280

இந்த நகரசபைத் தேர்தலில் நாங்கள் வாக்களிப்பது மிகவும் முக்கியமானதாகும்.
Advance Voting Days: Saturday, February 4, 2017 and Sunday, February 5, 2017 (10:00 a.m. to 6:00 p.m.)
Voting Location: Malvern Community Recreation Centre, 30 Sewells Rd, Scarborough, ON M1B 3G5.
Final Voting on Monday, February 13, 2017 between 10:00 a.m. and 8:00 p.m.
மிகவும் நீண்ட காலமாக எமது சமுதாயமானது நகர, மாகாண, மத்திய அரச மட்டங்களில் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டு செயலாற்றி வருகின்றனர். எதிர்வரும் தொகுதி-42 ற்கான நகரசபை இடைத்தேர்தலிலும் எமது தொண்டர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எமது நாளாந்த வாழ்க்கையின் தராதரத்தை நிர்ணயிப்பதில் நகர சபைகள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவ்வாறு இருக்கும் இந்த சூழலில் பொது மக்களாகிய நாங்கள் ஆற்றக்கூடிய முக்கிய கடமை இருக்கின்றது … அது தான் வாக்களிக்கும் ஜனநாயகக் கடமை. வாக்களிக்கும் தகுதி உள்ள ஒவ்வொரு தமிழனும் வாக்களிக்க வேண்டும். எங்கள் கருத்துக்களையும் விருப்பங்களையும் மிக முக்கிய அவசியமான தேவைகளையும் இதய சுத்தியுடன் கருத்தில் கொண்டு செயல்படக்கூடிய வேட்பாளரை தெரிவு செய்வதனூடாக அரசியல் செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.
வாக்களிப்பது எமது குடியுரிமையும் சமுதாயக் கடமையும் ஆகும். எங்கள் முழுச் சமுதாயமும் எமது வாக்கைப் பயன்படுத்துவோமேயானால், நாங்கள் இந்த நாட்டில் அக்கறை உள்ளவர்கள் என்பதைக் காட்ட முடியும். வாக்களிப்பதனூடாக, யாரும் இனிமேலும் எம்மை அசட்டை செய்ய முடியாத; ஒரு உறுதியான விவேகமுள்ள அதிகாரம் மிகுந்த தமிழ் சமூகத்தை நாம் உருவாக்க முடியும். வாக்களிப்பதனூடாக அரசியல் நடைமுறையில் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய எமது தகுதியை நாம் காட்ட முடியும்.
அரசியல் செயற்பாடுகளில் துடிப்புடனும் மேலும் ஈடுபாட்டுடனும் செயற்படுவதனால் நாங்கள் சரியான உறுப்பினரை தெரிவு செய்து சரியான விகிதாசார முறையில் எம்மை அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.
ஆகவே தான், இந்த நகரசபைத் தேர்தலில் நாங்கள் வாக்களிப்பது மிகவும் முக்கியமானதாகும்.
Advance Voting Days: Saturday, February 4, 2017 and Sunday, February 5, 2017 (10:00 a.m. to 6:00 p.m.)
Voting Location: Malvern Community Recreation Centre, 30 Sewells Rd, Scarborough, ON M1B 3G5.
Final Voting on Monday, February 13, 2017 between 10:00 a.m. and 8:00 p.m.
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416-830-7703
– See more at: http://www.canadamirror.com/canada/80005.html#sthash.iGBKnPDA.dpuf
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *