கொரோனா தொற்றுக்கு உள்ளான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பூரண குணமடைந்து சிகிச்சை நிலையத்தில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கடந்த வாரம் தனது கீச்சகப் பக்கத்தில் அறிவித்தார்.
மேலும் கடந்த 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதார அதிகாரிகளின் அறிவுரையினைப் பின்பற்றி தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டார்.
அதன்பின்னர் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்.
அண்மையில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.